அருளாச்சி முஹம்மது அலி ஜின்னா அவர்களின் இல்ல மணவிழா

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ....)

30/04/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று, சொக்கம்பட்டி  காந்தி மஹாலில் வைத்து அல்அமீன் துபைஜமாத்தின் செயலாளர் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் புதல்வி M.சுமையா நிலோபர் B.sc, DIT., (அருளாச்சி) M அப்துல் ஜாபர் (ஆத்துவழி) இவர்களின் நிக்காஹ் நடைபெற உள்ளது இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத் (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் எல்லாவல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.


மணமக்களை வாழ்த்தும் துஃஆ
"பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் "
(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும். மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றினைத்து வைக்கட்டும்)

2 comments:

 1. بارك الله لك وبارك عليك وجمع بينكما بالخير திருமண வாழ்த்துக்களுடன் ஒரு பதிவு மார்க்க கல்வி உலக கல்வி என்ற
  பிரிவினையின் கோர விளைவுகளில்
  இதுவும் ஒன்று...
  ************************************
  ஒரு யூத பெண் தாய்மை அடைந்தால்
  பின்பற்ற வேண்டிய வாழ்வியல் முறைகள்
  குறித்த கையேட்டை யூதர்கள் வைத்துள்ளனர்

  நூற்றாண்டுகளாக பின்பற்றப்படும் இந்த
  கையேட்டை கால மாற்றத்திற்கு ஏற்றார் போல்
  யூத உலமாக்களால் (ராபி) நவீனப்படுத்தப்பட்டு
  யூத பெண்களுக்கு வழங்கப்படுகிறது

  தாய்மை அடைந்த பெண்ணின் உணவு,உடை
  உறக்கம்,வழிபாடு,வாழும் இடம்,சுற்றுச்சூழல்,
  வாசிப்பு,சிந்தனை,ஆய்வு,கணவனின் பொறுப்புகள்,
  என அனைத்தும் உள்ளடக்கிய முழுமையான
  வழிகாட்டி கையேடு அது.

  " உலகின் தலைசிறந்த விஞ்ஞானியை நான்
  பெறப்போகிறேன் " என்பதை அந்த யூத பெண்
  கண்ணாடி முன் நின்று ஒவ்வொரு நாளும்
  உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கையேடு
  வலியுறுத்துகிறது.

  இந்தியாவில் RSS இன் மருத்துவப் பிரிவான
  ஆரோக்கிய பாரதி என்ற அமைப்பு தாய்மை
  அடைந்த பெண்களுக்கான 2 நாள் பயிலரங்கத்தை
  வடக்கே தொடர்ந்து நடத்தி வருகிறது

  பண்டைய வேதங்களில் கூறப்பட்டுள்ள
  " கர்ப சம்ஸ்கார்" "தம்பதி சமீக்ஸான்"
  ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில்
  ஆயுர் வேத சிகிச்சை முறையில் இந்த
  பயிலரங்கம் இருக்கும் என்று கூறுகின்றனர்.

  இன்றைய இந்திய பெற்றோரின் விருப்பத்தை
  புரிந்து கொண்டு.......

  " மரடோனா போன்ற கால்பந்தாட்ட பிள்ளை
  உங்களுக்கு வேண்டுமா,டெண்டுல்கர் போன்ற
  கிரிக்கெட் விளையாடும் பிள்ளை வேண்டுமா,
  ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானி வேண்டுமா,
  அல்லது தாகூர் போன்ற கவிஞர் பிள்ளை
  வேண்டுமா எங்களிடம் பயிற்சி பெறுங்கள் "
  என்ற இவர்களின் விளம்பரம் தான் வட
  இந்தியாவின் இப்போதைய ஹாட் நியூஸ்

  யூதர்களும் பிராமணர்களும்..... அவர்கள்
  கண்ணுக்கு தெரிந்து புகழ் பெற்ற...விஞ்ஞானி,
  மரடோனா, டெண்டுல்கர், தாகூர், போன்றவர்களை
  அவர்கள் சமூகத்தில் உருவாக்க பெரிதும் முயற்சி
  செய்கின்றனர்.

  ஆனால்.....

  பூமியில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையையும்
  இந்த அண்டங்களை படைத்து பாதுகாக்கும்
  எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பிரதிநிதி (கலீஃபா)
  என்று குர்ஆன் சொல்லுகிறது

  காரணம் அவன் அல்லாஹ்வின் கட்டளைகளை
  நிறைவேற்றி அவனது சட்டங்களை மனிதர்களிடையே
  நிலைநிறுத்தும் பொறுப்பை சுமப்பவன்

  உலக மனிதர்களிலேயே சிறந்தவன்

  அப்படிப்பட்ட உயர்ந்த தரமுடைய அல்லாஹ்வின்
  பிரதிநிதியை பெற்றெடுக்கும் நமது பெண்களுக்கு
  தாய்மை காலத்தில் பேண வேண்டிய வாழ்வியல்
  ஒழுக்கங்களை கற்றுத் தருவதற்கு நாம் இதுவரை
  எந்த கையேட்டையும் தயாரிக்கவில்லை.
  சிறப்பு பயிலரங்கமும் நடத்துவதில்லை.

  சமுக உருவாக்கத்தின் அடிப்படையான துறையில்
  நாம் இன்னும் கவணம் செலுத்தவில்லை என்பதின்
  அடையாளம் இது. அதனால் தான் சிசேரியன் பித்தம்
  சமூகத்ததின் தலைக்கு ஏறி ஆட்டுகிறது.

  முஸ்லிம் திருமனத்தின் நோக்கம், நபி (ஸல்)
  காட்டிய அதன் வழிமுறை,இல்லற வாழ்வு,
  சாலிஹான பிள்ளைக்கான பிரார்த்தனை,நேர்ச்சை,
  தாய்மை கால பெண்ணின் வழிபாடு,இறை தியானம்,
  கணவனின் கடமைகள்,வாழும் சூழல்,உணவு,
  உண்ணும் முறை,மருந்து,உடற்பயிற்சி,
  இயற்கை முறை பிரசவம்....

  அப்படி பிரசவத்தின் போது மரணம் ஏற்பட்டால்
  ஷஹாதத் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை.....பிரசவித்த
  2 ஆண்டுகள் தாய்பால் கொடுப்பதற்கான முன்
  தயாரிப்புகள்.....

  இவை எல்லாவற்றுக்குமான வழிகாட்டுதலை
  உள்ளடக்கிய ஒரு முழுமையான பிரசவ கால
  கையேட்டை நாம் உருவாக்க வேண்டும்.

  இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

  காரணம்....

  கடந்த 100 ஆண்டுகளாக.....

  மார்க்கத்தை கற்ற உலமாக்களுக்கு மருத்துவம்
  மற்றும் இன்றைய வாழ்கை முறை அறிவியல்
  தெரியாது

  MBBS படித்த முஸ்லிம் மருத்துவர்களுக்கு மார்க்க
  சட்டங்களும் இஸ்லாமிய வாழ்கை முறை குறித்த
  பயிற்சியும் தெரியாது

  மார்க்க கல்வி உலக கல்வி என்ற பிரிவினையின்
  கோர விளைவுகள் இவை.

  - CMN SALEEM

  ReplyDelete

 2. What's Taking place i am new to this, I stumbled upon this I have found It absolutely helpful and it has aided me out loads. I'm hoping to contribute & help different customers like its aided me. Great job. craigslist boston

  ReplyDelete