புளியங்குடி வரிசைஅம்மாள் பீவி அவர்கள் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புளியங்குடி காயிதேமில்லத் தெருவைச்சேர்ந்த  மர்ஹூம் சுல்த்தான் மரைக்காயர் அவர்களின் மனைவியும் மர்ஹூம் கமீது மரைக்காயர் (புளியங்குடி) , காஜாகனி அம்மாள் ( புளியங்குடி ) , அஹமது பீவி ( வாசுதேவநல்லூர் ) , வாவாசி பீவி ( புளியங்குடி )மற்றும் மைதீன் மீராள் பீவி ( வாசுதேவநல்லூர் ) இவர்களின் தாயாரும் நமது அல்அமீன் மன்ற உறுப்பினர் சுல்த்தான் மரைக்காயர்  என்ற கனி ( அபுதாபி ) இவர்களின் ஆச்சாவுமாகிய வரிசைஅம்மாள் பீவி அவர்கள் 14/11/2013 வியாழக்கிழமை மாலை 5.00 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 15/11/2013 இன்று வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி அளவில்  புளியங்குடியில் வைத்து நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இன்ஷா அல்லாஹ் 15/11/2013 வெள்ளிகிழமை மாலை 6:00 மணிஅளவில்  துபாய் முஹைஸினா RTA பள்ளியில் வைத்து ஐனாஸா தொழுகை நடைபெறும் அனைவரும் கலந்து துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment