அல்அமீன் துபை ஜமாஅத்தின் 11ம் ஆண்டு துவக்கவிழாவும் நிர்வாகிகள் தேர்வும்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
அல்அமீன் துபை ஜமாஅத்தின் 11ம் ஆண்டு துவக்கவிழா  15/10/2013 செவ்வாய்கிழமை காலை 11.00 மணிஅளவில்  துபை மம்ஸார் பார்க்கில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.  இன்றைய  விழாவின் தலைவராக அருளாட்ச்சி M.செய்யதுஇப்ராஹிம்  மரைக்காயர் அவர்கள் பொறுப்பேற்க்க  அருளாட்ச்சி P.முகம்மது ஷரிப் ஆலிம் அவர்கள் அதனை வழி மொழிந்தார்கள். இதனைத் தொடர்ந்து அருளாட்ச்சி S.சாகுல் ஹமீது ஆலிம் அவர்கள் கிராஅத் ஒத விழா இனிதே துவங்கியது. மன்றத்தின் முன்னாள் துனைச்செயலாளர்  சோலைசேரி N.முகம்மது கனி ( பொறியாளர் ) அவர்கள் ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்து  மன்றத்தின் வளர்ச்சிப்பணிகள் பற்றி உறையாற்றினார்கள்.    மன்றத்தின் பொருளாளர் வாசுதேவநல்லூர் S.அப்துல் காதர் அவர்கள் ஆண்டின் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.

இஸ்லாத்தின் கடமைகள் பற்றியும் , ஸதக்கா செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும்  அருளாட்ச்சி P.முகம்மது ஷரிப் ஆலிம் அவர்கள் உறையாற்றினார்கள். மன்ற உறுப்பினர்களின் ஒற்றுமை மற்றும் 10 ஆண்டுகள் கடந்துவந்த பாதைகள் பற்றி  விழாவின் தலைவர் அருளாட்ச்சி M.செய்யது இப்ராஹிம்  அவர்கள் பேசினார்கள். தொடர்ந்து மன்றத்தின் 11வது ஆண்டின்  நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் விபரம்.....

தலைவர் : P.முகம்மது ஷரிப் ஆலிம் (அருளாட்ச்சி)  துனைத் தலைவர் : S.அப்பாஸ் ( பாம்புகோவில் சந்தை )  செயலாளர் : S.முஹம்மது அலி ஜின்னா  (அருளாட்ச்சி)  துனைச் செயளாளர் : N.மாயின் அபுபக்கர் ( வாசுதேவநல்லூர் ) பொருளாளர்  : S.அப்துல் காதர் (வாசுதேவநல்லூர்) துனைப் பொருளாளர் : M.இஸ்மாயில்  ( மேலப்புதூர் ) தொலைத் தொடர்பு தலைவர் : செய்யது அலி பாதுஷா என்ற செல்லவாப்பா ( ஊத்துமலை ) துபாய் : M.அசன் கனி ( வாசுதேவநல்லூர் ) ஜார்ஷா : M.காதர்ஒலி ( மேலமருதப்புரம் ) செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் : MMS.முகம்மது மைதீன் (அருளாட்ச்சி) , N.முகம்மது மைதீன் (அருளாட்ச்சி  P.முகம்மது ஹூஸைன் ( வெள்ளாணக் கோட்டை ) அபுசாலி ( லால் பேட்டை ) D.சேக்மைதீன் ( ஊத்துமலை ) கௌரவ ஆலோசகர்கள் : M.செய்யது இப்ராஹிம் (அருளாட்ச்சி)  N.முகம்மது கனி (சோலைசேரி).

வெள்ளாணக்கோட்டை P.முகம்மது ஹூஸைன் அவர்கள் கடந்த ஆண்டு திருமணம் முடித்த மன்ற உறுப்பினர்கள் S.செய்யது அபுதாஹிர் ( ஊத்துமலை ) மற்றும் V.காதர் மைதீன்  ( வெள்ளாணக்கோட்டை ) ஆகியோருக்கு அன்அமீன் துபை ஜமாஅத்தின் சார்பாக அண்பளிப்பு வழங்கினார்கள்.

மன்றத்தின்  முன்னால் கௌரவ ஆலோசகர்   அருளாட்ச்சி MMS.முகம்மது மைதீன் அவர்கள்  முகம்மது நபி ( ஸல் ) அவர்களின் வாழ்க்கைமுறை பற்றியும் மன்ற உறுப்பினர்களின் தியாக உள்ளங்கள்  பற்றியும்  நமது மன்றத்தின் தாயக பொருப்புதாரி P.அப்துல் ரஹீம் ஆலிம் அவர்களின் மன்றத்திற்கான உழைப்பு , உதவி பற்றியும்   உறை ஆற்றினார்கள். இதனைத்தொடர்ந்து அனைவருக்கும் நன்றி உறையும்  வாழ்த்துறையும் வழங்கினார்கள். பின்னர் மதிய உணவு பரிமாறப்பட்டது.  P.முகம்மது ஷரிப் ஆலிம் அவர்களின் துஃஆவுடன் அல்ஹம்து லில்லாஹ் விழா இனிதே நிறைவு பெற்றது.

1 comment:

  1. IBRAHIM from CHENNAIOctober 20, 2013 at 12:36 PM

    i Like Al Ameen Dubai Jamath Team

    ReplyDelete