செங்கோட்டை பகுதியில் சம்பங்கி பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

செங்கோட்டையில் சம்பங்கி பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
ஆண்டு தோறும் வருமானம் தரும் பயிரான சம்பங்கி பூ சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். செங் கோட்டை, கண்ணுப்புளிமெட்டு, வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பூ பயிரிட்டுள்ளனர். ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு பலன் தரக்கூடிய பணப்பயிரான இந்த சம்பங்கிக்கு குறைந்த அளவு தண்ணீர் இருந்தாலே போதுமானது. 
மல்லிகைப் பூவின் வரிசையில் வரும் இந்த சம்பங்கி சீக்கிரத்தில் வாடாது. திருமணம் மற்றும் கோவில் திருவிழாக்களுக்கு அதிகளவில் சம்பங்கி பூ தேவைப்படுகிறது. இதன் தேவையை அறிந்து தற்போது இப்பகுதிகளில் அதிகளவில் சம்பங்கி பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாரத்தில் ஒரு நாள் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
சொட்டு பாசனம் என்றால் 2 நாளுக்கு ஒரு நாள் தண்ணீர்விட வேண்டும் என்றும், 365 நாட்களும் இந்த செடியிலிருந்து சம்பங்கியில் பூக்கள் பறிக்கலாம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சம்பங்கி பூ மருத்துவ குணம் கொண்டது என்றும், இதில் இருந்து சருமத்தை பாதுகாக்கின்ற  தைலம், தலைவலியை போக்கும் தைலம், ஜீரண சக்தியை கொடுக்கும் மருந்து என தயாரிக்கப்படுவதாகவும், பலவகைகளில் சம்பங்கியின் தேவை சந்தையில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர். 
குறைந்த செலவில் அதிக லாபத்தை ஈட்டிதரும் சம்பங்கி பூவின் விவசாயத் தில் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment