1057 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வருமான கணக்கை தாக்கல் செய்யவில்லை..!


இந்த ஆண்டு குறிப்பிட்ட கால வரையறைக்குள் 1057 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது அசையா சொத்துகளில் இருந்து கிடைக்கும் வருமான விவரத்தை அரசிடம் இன்னும் தாக்கல் செய்யவில்லை.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களுக்குச் சொந்தமான அசையா சொத்துகளில் இருந்து கிடைக்கும் வருமான விவரத்தை, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதக் கடைசியில் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
அப்படி தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அல்லது முதுநிலை பதவிகளுக்கான பட்டியலில் சேர்க்கப்படுவது மறுக்கப்படும்.
இந்தியா முழுவதும் 6,217 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் 1,057 பேர், 2012-ஆம் ஆண்டுக்கான அசையா சொத்துகள் வருவாய் விவரத்தை இன்னும் அரசிடம் தாக்கல் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் தான் இதில் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலப் பிரிவைச் சேர்ந்த 147 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வருமான விவரத்தை தெரிவிக்கவில்லை. அருணாசலபிரதேசம், கோவா, மிúஸாரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 114 பேரும், மணிப்பூர், திரிபுராவைச் சேர்ந்த தலா 100 பேரும் வருமான கணக்கை தாக்கல் செய்யவில்லை.
ஜம்மு-காஷ்மீரில் 96 பேரும், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 88 பேரும், கர்நாடகத்தைச் சேர்ந்த 58 பேரும், ஆந்திரத்தைச் சேர்ந்த 53 பேரும், பஞ்சாபை சேர்ந்த 48 பேரும், ஒடிசாவைச் சேர்ந்த 47 பேரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 45 பேரும், இமாசல பிரதேசத்தைச் சேர்ந்த 40 பேரும், ஹரியாணாவைச் சேர்ந்த 35 பேரும் வருமான விவரத்தை தாக்கல் செய்யாமல் உள்ளனர்.
ஜார்க்கண்டில் 25 பேரும், அசாம், மேகாலயத்தில் தலா 23 பேரும், ராஜஸ்தானில் 22 பேரும், தமிழகத்தில் 20 பேரும், மகாராஷ்டிரத்தில் 17 பேரும், நாகாலாந்தில் 16 பேரும், குஜராத்தில் 14 பேரும், பிகாரில் 13 பேரும், கேரளத்தில் 10 பேரும், உத்தரகண்ட் மற்றும் சத்தீஸ்கரில் தலா 9 பேரும், சிக்கிமில் 8 பேரும் அசையா சொத்துகளில் இருந்து கிடைத்த வருமான கணக்கை தாக்கல் செய்யவில்லை.
இந்த தகவல் மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment