இன்று துபாய் ஈமான் மீலாத் பெருவிழா

துபாய் ஈமான் (இந்திய‌ன் முஸ்லிம் அசோசியேஷ‌ன்) அமைப்பு உல‌க‌த்தை உய்விக்க‌ வ‌ந்த‌ உத்த‌ம‌த் திருநபியின் உத‌ய‌ தின‌ விழாவினை மீலாத் பெருவிழாவாக‌ ஹிஜ்ரி 1434 ர‌பியுல் அவ்வ‌ல் பிறை 12, 23.01.2013 அன்று மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் (குவைத் ப‌ள்ளி) ந‌ட‌த்த‌ இருக்கிற‌து என‌ பொதுச் செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ. லியாக்க‌த் அலி தெரிவித்துள்ளார்
.
விழாவுக்கு இஸ்லாமிய‌ விவ‌கார‌த்துறையின் மூத்த‌ ஆலோச‌க‌ர் ஜாவித் அக‌ம‌து க‌த்தீப் முன்னிலை வ‌கிக்கிறார். தென்காசி ஜாமிஆ அல்தாபுர் ர‌ப்பானியா அர‌பிக் க‌ல்லூரியின் முத‌ல்வ‌ர் மௌல‌வி ஹாபிஸ் காரி அல்ஹாஜ் எம்.ஹெச். ஷ‌ம்சுத்தீன் உல‌வி விழாப் பேருரை நிக‌ழ்த்த‌ இருக்கிறார்.

மௌல‌வி ஷ‌ம்சுத்தீன் உல‌வி தென்காசி ஹ‌ஜ்ர‌த் ஹ‌தீஜா பெண்க‌ள் அர‌பிக் க‌ல்லூரியின் முத‌ல்வ‌ராக‌வும், ர‌ப்பானியா க‌ல்வி ம‌ற்றும் த‌ர்ம‌ அற‌க்க‌ட்ட‌ளையின் மேனேஜிங் டிர‌ஸ்டியாக‌வும், ர‌ப்பானியா ந‌ர்ச‌ரி ம‌ற்றும் துவ‌க்க‌ப் ப‌ள்ளியின் தாளாள‌ராக‌வும், திருநெல்வேலி மாவ‌ட்ட‌ ஜ‌மாஅத்துல் உல‌மா ச‌பையின் பொதுச் செய‌லாள‌ராக‌வும், ப‌ல்ச‌ம‌ய‌ உரையாட‌ல் மைய‌த்தின் நிர்வாக‌க் குழுவிலும் இட‌ம் பெற்றுள்ளார்
.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் விழாக்குழுச் செய‌லாள‌ர் கீழை ஹ‌மீது யாசினை 050 475 30 52 எனும் அலைபேசி எண்ணில் தொட‌ர்புகொள்ளலாம்.


No comments:

Post a Comment