குர்ஆனை மனனம் செய்ய தாமதமாக்கிய மகனை படுகொலை செய்த தாய்......!

இந்திய வம்சாவழியை சேர்ந்த யூசுப் எகே என்பவர், லண்டன் நகரில் டாக்சி ஓட்டுநராக வேலை செய்து வருகின்றார்  இவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகின்றார்.

கடந்த 2010ம் ஆண்டு, யூலை மாதம் இவரது மனைவி சாரா (வயது 33), குர்ஆனை விரைவாக மனப்பாடம் செய்யவில்லை என்பதற்காக 7வயது மகனை பிரம்பால் அடித்தே கொன்றிருக்கிறார். இந்த கொலை வெளியே தெரியாமல் இருப்பதற்காக, இறைச்சியை தீய்க்க பயன்படுத்தும் திரவத்தை அந்த சிறுவன் பிணத்தின் மீது ஊற்றி எரித்து, தடயத்தை அழிக்கவும் அந்த பெண் முயன்றுள்ளார்.

பிரேத பரிசோதனையின் போது, தீயில் கருகியதற்கு முன்னரே அந்த சிறுவன் உயிரிழந்திருக்க வேண்டும் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, சாராவிடம் பொலிஸார் விசாரித்தபோது, துஷ்ட ஆவிகளின் தூண்டுதலின் பேரில் சுயநினைவு இழந்தவளாய் இந்த தவறை செய்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

லண்டன் நகரில் உள்ள கேர்டிப் கிரவுன் நீதிமன்றத்தில், சாரா மீது பொலிஸார் கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. சாராவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி வெய்ன் வில்லியம்ஸ், '17 ஆண்டு சிறைதண்டனையை நிறைவுசெய்த பின்னரே குற்றவாளியை பரோலில் விடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment