10ம் ஆண்டு துவக்கவிழாவும் நிர்வாகிகள் தேர்வும்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அல்அமீன் துபைஜமாஅத்தின் 10ம் ஆண்டு துவக்கவிழா 26/10/2012 வெள்ளிக்கிழமை துபாய் மம்ஸார் பார்க்கில் வைத்து மதியம் 1.30 மணி அளவில் தெடங்கி மாலை 6.00 மணிவரை நடைபெற்றது. விழாக்குழு தலைவர் ஜனாப்.S.நைனார் முகம்மது அவர்கள் தலைமையில் ஜனாப்.MMS. முஹம்மது மைதீன் (ஷரிப்) அவர்கள் நிகழ்ச்சி நிரல் வாசிக்க கூட்டம் இனிதே துவங்கியது. N.முஹம்மது மைதீன் அவர்களின் சிற்றுரையை தொடர்ந்து மன்றத்தின் செயலாளர் S.முகம்மது அலி ஜின்னா அவர்கள் ஆண்டு அறிக்கை சமர்பித்தார். அதனைத்தொடர்ந்து மன்றத்தின் பொருளாளர் S.அப்துல் காதர் அவர்கள் ஆண்டு வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.

கூட்த்தில் V.நாகூர்மீரான், M.முஜிபுர் ரஹ்மான், P.சேக்மிய்யான் மற்றும் M.அபுதாஹிர் ஆலிம் ஆகியோர் உறையாற்றினார்கள். மன்றத்தின் தலைவர் M.செய்யது இப்ராஹிம், கௌரவ ஆலோசகர் MMS.முகம்மது மைதீன் (ஷரிப்) மற்றும் விழாவின் தலைவர் S.நைனார் முஹம்மது ஆகியோர் சிறப்புறை ஆற்றினார்கள். கூட்த்தில் ஸதக்கா செய்வதன் மகத்துவம் பற்றியும், கல்வி கற்பதன் தேவைகள் பற்றியும் பேசப்பட்டது இதனைத் தொடர்ந்து மன்றத்தின் 10 ம் ஆண்டின் புதிய பொருப்புதாரிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

தலைவர்     - S.முஹம்மது அலி ஜின்னா  (அருளாட்ச்சி) துனைத் தலைவர் M.அபுதாஹிர் ஆலிம்   (மேல புதூர்), செயலாளர் - V.நாகூர் மீரான் (வெள்ளாணக் கோட்டை) துனைச் செயளாளர் - S.முஹம்மது கனி    (சோலைசேரி) , செயின் அலி    (பாம்புகோவில் சந்தை) பொருளாளர் - M.செய்யது இப்ராஹிம் (அருளாட்ச்சி), துனைப் பொருளாளர் - S.அப்துல் காதர் (வாசுதேவநல்லூர்), S.பட்டாணி (ஊத்துமலை). தொலைத் தொடர்பு தலைவர் துபாய் - ஷேக் அப்துல் காதர் (ஊத்துமலை) ,தலைவர்  ஜார்ஷா -P.ஷேக் மிய்யான்  ((வெள்ளாணக் கோட்டை) துபாய் -K.மைதீன் (ஊத்துமலை), ஜார்ஷா  M.ஷாஜகான்  (அருளாட்ச்சி). கௌரவ ஆலோசகர்கள் - MMS.முஹம்மது மைதீன் - ஷரிப் (அருளாட்ச்சி), S.நைனார் முஹம்மது  (சங்கரன் கோவில்) .செயற்குழு உறுப்பினர்கள் - தலைவர் P.முஹம்மது ஷரிப் ஆலிம் (அருளாட்ச்சி) மற்றும் M.அசன் கனி  (வாசுதேவநல்லூர்) , N.நாகூர் மைதீன் ஷரிப் (ஊத்துமலை), ஜாபர் சாதிக் (மதுரை).

மன்றத்தின் பொருளாளர் MMS.ஜலாலுதீன் (அருளாட்ச்சி) அவர்கள் நன்றி உறையும் S.முஹம்மது ஹஸன் (அருளாட்ச்சி) அவர்கள் வாழ்த்துறையும் வழங்கினார்கள். பின்னர் மதிய உணவு பரிமாறப்பட்டது. M.அபுதாஹிர் ஆலிம் அவர்களின் துஃஆவுடன் அல்ஹம்து லில்லாஹ் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment