ஹஜ் பயணிகள் 421 பேர் தவிப்பு


தமிழ்நாட்டிலிருந்து புனித ஹஜ் பயணம் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா சார்பில் லிகேடி விமானம் இன்று காலை புறப்படத் தயாராக இருந்தது.
இந்த விமானத்தில் 421 பயணிகள் ஹஜ் செல்வதற்காக இருந்தனர். இந்நிலையில் விமானத்தை ஓடு பாதைக்கு தள்ளும் வாகனம் மூலம் தள்ளிக் கொண்டு வந்தபோது அங்கு டிராக்டரின் இரும்பு கம்பி நீட்டிக் கொண்டிருந்தது. அதில் விமானத்தின் இறக்கை மோதியதில் இறக்கை சேதம் அடைந்தது. இதனால் விமானம் குலுங்கியதையடுத்து உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இருப்பினும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினார்கள். உடனே ஊழியர்கள், அதிகாரிகள் விரைந்து வந்து பயணிகளை பத்திரமாக கீழே இறக்கினார்கள். அவர்கள் விமான நிலைய ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து விமானம் புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது பொறியியலாளர்கள் வந்து விமானத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்கிறார்கள். இதில் திருப்தி ஏற்பட்டால் அந்த விமானம் புறப்பட்டுச் செல்லும், இல்லையெனில் மும்பையில் இருந்து வேறு விமானம் வரவழைக்கப்பட்டு அதில் 421 பயணிகளும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment