பேஸ்புக்கில் வலைவிரித்து... காதலித்து.. கருவைக் கலைத்து... டிராவல்ஸ் அதிபர் சிக்கினார்!

சென்னை: பேஸ்புக் மூலம் காதல் வலை விரித்து பெண் என்ஜினியரை வசியம் செய்து பழகி, பின்னர் கருவைக் கொடுத்து, அதையும் கலைத்து தாறுமாறாக நடந்து கொண்ட டிராவல்ஸ் நிறுவன அதிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது இதே பாணியில் மேலும் 3 பெண்களை அவர் மோசடி செய்தது தெரிய வந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏமாந்த என்ஜீனியரின் பெயர் ஜான்சி, 24 வயதாகிறது. இவர் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஆவார். ஜான்சி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பேஸ்புக்கில் 33 வயதான ராபர்ட் என்பவர் எனக்குப் பரிச்சயமானார். நட்போடு பழக ஆரம்பித்தார். தனது செல்போன் எண்ணையும் கொடுத்தார். காதலிப்பதாக கூற ஆரம்பித்தார்.
அவரும், நானும் கிறிஸ்தவர்கள் என்பதால் நானும் அவரது காதலை ஏற்றேன். தொடர்ந்து பேசி வந்தேன். முகம் பார்க்காமல் தொடர்ந்து அவரிடம் பேசி காதலித்து வந்தேன். இந்த நிலையில் என்னை நேரில் பார்க்க வேண்டும் என்று கேட்டார்.
இதையடுத்து அண்ணா நகர் டவர் பிளாக்கில் உள்ள அவரது டிராவல்ஸ் நிறுவனத்திற்குச் சென்றேன். கடந்த ஜனவரி மாதம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது அலுவலகத்தில் யாரும் இல்லை. முதல் சந்திப்பிலேயே என்னை அவரிடம் நான் கொடுத்து விட்டேன். பிறகு என்னைத் திருமணம் செய்து கொள்வதாகவும், தனது தாயார் மற்றும் கடவுள் மீதும் சத்தியம் செய்து கூறியதால் நான் முழுமையாக நம்பினேன். பின்னர் மேலும் 2 சந்தர்ப்பங்களில் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். இதனால் நான் கர்ப்பமடைந்தேன்.
இது எனது தாயாருக்கு தெரிய வந்து அவர் அதிர்ந்து போனார். மறுபக்கம் எனது கருவைக் கலைக்குமாறு ராபர்ட் வற்புறுத்தத் தொடங்கினார். கருவைக் கலைத்தால்தான் திருமணம் என்றும் மிரட்ட ஆரம்பித்தார். கருத்தடை மாத்திரைகளையும் வாங்கிக் கொடுத்தார். நானும் சாப்பிட்டேன். ஆனால் கரு கலையவில்லை.
இதனால் மீண்டும் ஒருமுறை மாத்திரையும், நாட்டு மருந்து ஒன்றையும் கொடுத்தார் ராபர்ட். அதைச் சாப்பிட்டதும் கரு கலைந்து அபார்ஷன் ஆகி விட்டது. இருப்பினும் கருவை முழுமையாகக் கலைப்பதற்காக ஒரு மருத்துவமனையில் சேர்த்து டிஎன்சி செய்தார்.
இது எனது தாயாருக்கும், சகோதரருக்கும் தெரிய வந்தது. இதையடுத்து ராபர்ட்டை அவர்கள் நேரில் சந்தித்து என்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினர், அவரும் சரி என்றார்.
ஆனால் அதன் பின்னர் என்னுடனான தொடர்புகளைத் துண்டித்து விட்டார். பேசுவதில்லை. மேலும் என்னைப் பற்றி எனது தோழிகளில் தவறான முறையில் பேச ஆரம்பித்தார். ஜாலியாக இருப்பதற்காகவே என்னுடன் பழகியதாகவும் அவர்களிடம் அவர் கூறினார்.
மேலும் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கவும் ஆரம்பித்தார். இப்போது பணம் தருகிறேன் என்றும் கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார் ஜான்சி.
இதையடுத்து அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் ராபர்ட் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவர் பெண்களிடம் இதுபோல நைச்சியமாக பேசி பாலியல் மோசடி செய்வதை பொழுதுபோக்கு போல செய்து வந்தது தெரிய வந்தது. அதாவது நிர்மலா ராணிதவிர மேலும் 3 பெண்களிடம் அவர் மோசடி செய்துள்ளார். ஜான்சியை உதறிய பின்னர் தற்போது கல்லூரி மாணவி ஒருவரிடம் அவர் பழகி வருவதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்... 

No comments:

Post a Comment