அஹ்மத் ஷஃபீக் U.A.E ஷேக் கலீஃபாவின் அதிகாரப்பூர்வ அரசியல் ஆலோசகர்!


அபுதாபி:எகிப்தின் முன்னாள் பிரதமரும், கடந்த அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய வேட்பாளருமான அஹ்மத் ஷஃபீக் ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளரும், அபுதாபி அமீருமான ஷேக் கலீஃபா பின் ஸெய்தின் அதிகாரப்பூர்வ அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அமீரின் அலுவலகத்தில் இருந்து வெளியான சிறப்பு செய்திக் குறிப்பில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முஹம்மது முர்ஸியிடம் தோல்வியை தழுவியவுடன் அஹ்மத் ஷஃபீக் எகிப்தை விட்டு வெளியேறிவிட்டார். உம்ராவுக்கு பிறகு புதிய அரசியல் கட்சியை துவக்குவதற்கான பிரச்சாரத்திற்காக எகிப்திற்கு திரும்புவேன் என கூறி ஷஃபீக் எகிப்தை விட்டு வெளியேறியிருந்தார்.
ஆனால், பின்னர் அவர் அபுதாபிக்கு வருகை தந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய அதிகாரப்பூர்வ பதவி கிடைத்துள்ளதால், எகிப்தின் அரசியலில் இருந்து விலகவே ஷஃபீக் திட்டமிட்டுள்ளார் என கருதப்படுகிறது. சில ஊழல்கள் தொடர்பாக கைது செய்யப்படும் சாத்தியக் கூறுகள் இருப்பதால் ஷஃபீக் எகிப்தை விட்டு வெளியேறினார் என்றும் கூறப்பட்டது.

No comments:

Post a Comment