ஃபேஸ்புக்கில் அவதூறான கருத்து: மனமுடைந்த மாணவி தற்கொலை!


சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் தன்னை பற்றி வெளியான அநாகரீகமான கருத்துக்களினால் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இரண்டு இளைஞர்கள் தன்னை பற்றி அவதாறான கருத்தினை வெளியிட்டதால், காஷ்மீரில் டிப்லமோ பயிலும் மாணவி மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டள்ளார்.
20 வயது நிரம்பிய ரக்ஷா ஷர்மா என்ற பெண், காஷ்மீரில் டிப்லமோ பயின்று வந்தார். இவரை பற்றி தீபக் சைனி மற்றும் லவ்பிரீத் சிங் என்ற இரண்டு இளைஞர்கள் தவறான கருத்துக்களை வெளியிட்டதனால், மனம் உடைந்த ரக்ஷா ஷர்மா தான் தங்கியிருந்த விடுதியிலேயே கடந்த செவ்வாய்கிழமை இரவு தூக்கிட்டு கொண்டுள்ளார். தீபக் சைனி மற்றும் லவ்பிரீத் சிங் என்ற 2 இளைஞர்களையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
1997ம் ஆண்டு தீவிரவாதிகளால் பெற்றோர்கள் கொள்ளப்பட்டதால் ரக்ஷா ஷர்மாவும் இவரது தங்கைகளும் ஜம்மு-கேஷமீரில் உள்ள டோடா என்னும் இடத்தில் இருந்து ஜலந்தருக்கு நகர்ந்தனர். ஜலந்தரில் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்லமோ பயின்று வந்த இவரை பற்றி அவதாரான கருத்துக்கள், இவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றனர் தீபக் சைனி மற்றும் லவ்பிரீத் சிங் என்ற இளைஞர்கள்.
தன்னை பற்றிய தவறான கருத்து வெளியானதால், தான் தங்கியிருந்த விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் இந்த இரண்டு இளைஞர்களையும் கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் சில துப்புகளையும் கண்டறிந்துள்ளனர். தவறான கருத்துக்களை வெளியிட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவருடன் நிறைய மெசேஜ்களை, ரக்ஷா ஷர்மாவின் மொபைலில் இருந்து பரிமாறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
இன்னும் இது பற்றி தீவிரமான விசாரனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. நண்பர்களுடன் தகவல்களை எளிதாக பரிமாறி கொள்வதற்காக உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சில முறைகேடான பின்பற்றுதல்களால் நிறைய பிரச்சனைகளையும் உருவாக்கி வருகிறது.
விளையாட்டான சில கருத்து பரிமாறல்களால் வாழ்க்கையையே திசை மாற்றிவிடும் அபாயமும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கில் ஏற்பட்டு வருகிறது. இதனால் இது போன்ற சமூக வலைத்தளங்களை ஜாக்கிரதையாக கையாள வேண்டி இருக்கிறது.


No comments:

Post a Comment