ஸ்மார்ட்போன்களை குறி வைக்கும் சைபர் குற்றவாளிகள்!


கூடிய விரைவில் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை சைபர் குற்றவாளிகள் குறி வைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்போதெல்லாம் அதிகமான தகவல்கள் ஸ்மார்ட்போன்களின் மூலம் பரிமாறி கொள்ளப்படுகிறது. கம்ப்யூட்டர் மூலம் தேவையான தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்தி வந்தது போய், இப்போது வாடிக்கையாளர்கள் அதிகம் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புகின்றனர்.
ஏனெனில் கம்ப்யூட்டரில் பெற்ற வசதிகள் அனைத்தும், இன்று ஸ்மார்ட்போன்களிலேயே பெற முடியும் என்ற வசதி தான் காரணம். உதாரணத்திற்கு முக்கிய சம்பவங்கள் பற்றி எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருந்து நேரடியாக கம்ப்யூட்டர்களில் பரிமாறி கொள்வது போன்ற வசதிகளும் உருவாகி
வருகின்றன.
அது மட்டுமல்லாமல் வங்கிக்கு பண பரிமாற்றங்கள் அனைத்தும் ஸ்மார்ட்போன்களிலேயே செய்யப்படுகிறது. ஸ்மார்ட்போன்களில், நிறைய பாஸ்வேர்டு மற்றும் வங்கி அக்கவுன்டு நம்பர் போன்ற முக்கியமான தகவல்கள் இப்போது ஸ்மார்ட்போன்களிலேயே பரிமாறி கொள்கின்றனர்.
தொழில் நுட்ப சவுகரியங்களை வழங்கும் கம்ப்யூட்டர்களின் வசதிகள் இப்போது உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களில் பெற முடிகிறது. இதனால் சைபர் குற்றவாளிகள் ஸ்மார்ட்போன்களில் உள்ள பாஸ்வேர்டு போன்ற முக்கிய தகவல்களை திருட முற்பட்டால் இதன் மூலம் பெரிய பாதிப்பு இருக்கும்.
சமீபத்தில் தான் உலகின் அனைத்து கம்ப்யூட்டர்களையும் கட்டுப்படுத்தும் வகையில், புதிய வைரசை ஹேக்கர்கள பரப்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த புதிய வைரஸ்களால் வரும் ஜூலை மாதம் இணையதளங்கள் முடக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் கூகுள் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதிலும் பெரும்பாலான மக்கள் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை தான் பயன்படுத்துகின்றனர். அதிலும் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பாதுகாப்பு குறைவாக இருப்பதால், இந்த இயங்குதளத்தினை சைபர் குற்றவாளிகள் எளிதாக தாக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த செய்தி மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு தகவல் என்று கூட சொல்லலாம்.

No comments:

Post a Comment