மே 25, துபை ஈமான் அமைப்பு நடத்தும் அல்ஹம்துலில்லாஹ் நிகழ்ச்சி

துபை : துபை ஈமான் ( இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷ் – IMAN ) அமைப்பு 25.05.2012 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 5 மணி முதல் 9 மணி வரை அல் கிஸஸ் லூலூ ஹைபர் மார்க்கெட் பின்புறம் அமைந்துள்ள கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளியில் அல்ஹம்துலில்லாஹ் எனும் இஸ்லாமிய சிறப்பு ஒலி – ஒளி தொகுப்பு நிகழ்ச்சியினை நடத்த இருக்கிறது என பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியினை தஞ்சை ஜலாலுதீன் வடிவமைத்து தொகுத்து வழங்குகிறார்.
இந்நிகழ்வில் குடும்பத்தினருடன் அனைவரும் பங்கேற்கலாம். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது
நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர்  055 800 79 09  / 050 51 96 433 / 050 658 93 05ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது வருகையினை முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment