உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள்!

பெற்றோர்கள் பொதுவாக ஒருவரோடு மற்றொருவரை ஒப்பிட்டு பேசுவார்கள். ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் ஒப்பிடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளனர்.பெற்றோர்கள் இவ்வாறு பேசுவதினால் ஒரு குழந்தையை பார்த்து மற்ற குழந்தை தன் தவறை திருத்திக் கொள்வர் என நினைகிறார்கள். ஆனால்


ஒப்பிட்டு பேசுவது என்பது எந்த ஒரு குழந்தையினாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
சிலர் தன் இரு குழந்தைகளில் ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டு பேசுவர். உன் தம்பி வயதில் உன்னோடு சிறியவன் எவ்வளவு நல்ல மதிப்பெண் பெற்றுள்ளான், அவனை பார்த்தும் நீ திருந்த மாட்டியா? என்று ஒப்பிட்டு பேசுவதும், உன் நண்பனை பார் புத்தகங்களை அழகாக பாதுகாத்து வைத்துள்ளான், நியோ எப்படி கிழித்து விட்டாயே உன்ன திருத்தவே முடியாது, திருந்தவே மாட்ட என திட்டியே தீர்த்து விடுவார்கள்.
சிறு சிறு விஷயங்களுக்கு கூட மற்ற நண்பர்களோடு அல்லது தன் உடன் பிறப்புகளோடு எப்பொழுதும் ஒப்பிட்டு பேசி கொண்டே இருப்பார்கள்.
குழந்தைக்கு ஒரு கட்டத்தில் வெறுப்பு வர ஆரம்பித்து விடும். ஏன் எப்போது பார்த்தாலும் மற்றவர்களோடு ஒப்பிட்டு பேசுகிறீர்கள் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்க வில்லை என சில பிள்ளைகள் மனம் விட்டு கேட்டு விடுவார்கள், சில குழந்தைகள் அதையே மனதில் வைத்துக் கொண்டு யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள முடியாமல் மனநிலை பாதிக்கப்படுவார்கள்.
இந்த காலத்து குழந்தைகள் அனைத்தும் தனிமையை எதிர்பார்கின்றனர். பெற்றோர்கள் எதை சொன்னாலும் ஏற்று கொள்ள முடியாமல் மறுத்து பேசுகின்றனர்.
அதே பெற்றோர்கள் ஒரு காலக் கட்டத்தில் ஏன் எந்த ஒரு விஷயத்தையும் எல்லோரிடமும் கேட்டு முடிவெடுக்கிறாய், உன்னால் தனியாக எதையும் முடிவு செய்ய முடியாதா என இப்படியும் கேட்கின்றனர். மொத்ததில் என்ன செய்வது சரியான முடிவு எது என்று தெரியாமல் திகைக்கின்றனர். 

 பெற்றோர்கள் மற்ற குழந்தைகளோடு ஒப்பிடாமல் உனக்கு விருப்பம் என்ன? எவ்வாறு செய்தல் எதிர்காலத்தில் முன்னேறலாம் என ஆலோசனைகள் வழங்கலாம். எந்த ஒரு விஷயத்தையும் எவரையும் ஒப்பிடாமல் பேசி முடிவெடுக்கலாம்.
குழந்தைகளை சரியான முறையில் செயல் படுத்தினால் மட்டுமே மன உளைச்சலுக்கு ஆளாகாமல் தடுக்க முடியும். நினைத்த காரியங்களில் வெற்றி பெற முடியும், எந்த துறையிலும் சாதிக்க முடியும்.
பெற்றோர்களே!! உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு கொஞ்சம் மாறலாமே.
நன்றி   கல்வி களஞ்சியம் .
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்  
 www.alameendubaijamath.com

No comments:

Post a Comment