குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து: 4 பேர் பலி

குவைத்தில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். இந்த உயிரிழப்பை இந்திய தூதரகம் உறுதிபடுத்தியுள்ளது.
குவைத்தில் உள்ள 3 பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் மினா அல் அகமதியில் உள்ள சுத்திகரிப்பு ஆலை தான் மிகவும் பெரியது.

அங்கு நாள் ஒன்றுக்கு 4,60,000 பேரல் எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது. அந்த ஆலையில் உள்ள கேஸ் பைப் சனி்க்கிழமை அன்று திடீர் என்று வெடித்தது.

இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ராஜாராம் லக்ஷ்மையா ரெட்டி, லோகநாதன் பொன்னையா செந்திவேல், ஜானகிராமன் அர்ஜுனன் மற்றும் சிவச்சந்திரன் ஷண்முகம் ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிவாயு ஆலையில் பராமரிப்பு பணிகள் நடந்தபோது தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று குவைத் தேசிய பெட்ரோலிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களின் உடல்களை மீட்டு இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

NewIndiaNews

No comments:

Post a Comment