விண்வெளியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு


வாஷிங்டன், ஆக.14 - விண்வெளியில் மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்ளர் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது விண்ணில்  ஆய்வு நடத்திவருகிறது. இந்நிலையில் கெப்ளர் விண்கலம் விண்ணில் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்து அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் அளவில் வியாழன் கிரகத்தைவிட பெரிதாக உள்ளது. அதற்கு விஞ்ஞானிகள் டிரஸ் 2- பி என்று பெயரிட்டுள்ளனர். இதன்மீது சூரியனின் ஒளி ஒரு சதவீதம் மட்டுமே விழுகிறது. இதனால் அந்த கிரகம் கருப்பாக உள்ளது. அதன் மேற்பரப்பில் வாயு பிரதிபலிக்கிறது. வியாழன் கிரகத்தின் சூரியனின் வெளிச்சம் அதிக அளவில் படுவதால் அது மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. 
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டிரஸ் 2 பி கிரகத்தில் நீராதாரம் இருக்குமா என்பது அது கருப்பாக இருப்பதால் தெரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் இந்த கிரகத்தில் கடும் வெப்பமாக 1800 டிகிரி பாரன்ஹீட் நிலவுகிறது. தொடர்ந்து இந்த கிரகம் குறித்து கெப்ளர் விண்கலத்தின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

Thinaboomi

No comments:

Post a Comment