ரஷ்ய அரசுக்குச் சொந்தமான மிக் நிறுவனம் போர் விமானங்களைத் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்திடம் 16 போர் விமானங்களை வாங்க 2004ல் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.
மொத்தம் 1.5 பில்லியன் டொலர் மதிப்பீட்டிலான இந்த ஒப்பந்தப்படி 12 ஒற்றை இருக்கை விமானங்களும் நான்கு இரட்டை இருக்கை விமானங்களையும் இந்தியாவுக்கு அந்த நிறுவனம் தயாரித்து வழங்க வேண்டும்.
அதன்படி ஏற்கனவே 11 விமானங்களை வழங்கி விட்டது. அந்த விமானங்கள் இந்திய கடற்படையின் கருஞ்சிறுத்தை விமானப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள ஐந்து போர் விமானங்களையும், இந்தாண்டின் இறுதிக்குள் வழங்கி விடுவதாக மிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே 2010ல் 1.5 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் மேலும் 29 மிக்-29கே ரக விமானங்கள் வாங்க மிக் நிறுவனத்திடம் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விமானங்கள் அடுத்தாண்டு முதல் இந்தியாவுக்கு வழங்கப்படும்.
NewindiaNews
No comments:
Post a Comment