காலாண்டுத் தேர்வு செப்.22 - தமிழக அரசு


தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு செப்டம்பர் 22-ந் தேதி காலாண்டு தேர்வுகள் நடத்தப்படும்" என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு புதிய அரசு பொறுப்பேற்றப் பின்னர் எழுந்த சமச்சீர் கல்வி பிரச்சனையால் மாணவர்களுக்குக் கல்வி பாதிக்கப்பட்டது. எப்போதையும்விட மிகத் தாமதமாக பள்ளிகள் துவங்கப்பட்டன. உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு வந்தப் பின்னரே பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதனால் செப்டம்பர் மாதம் நடத்த வேண்டிய காலாண்டுத் தேர்வை எப்படி நடத்துவது என்று ஆசிரியர்கள் கைபிசைந்தபடி இருந்தனர். சனி, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அதிகமாக வகுப்புகள் நடத்தப்பட்டாலும் காலாண்டுத்தேர்வுக்கு முடிக்க வேண்டியப் பாடங்களை முடிக்க இயலாது!
இந்நிலையில், "தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு செப்டம்பர் 22-ந் தேதி காலாண்டு தேர்வுகள் நடத்தப்படும்" என்றும், "தேர்வுக்குரியப் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும்" என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Inneram

No comments:

Post a Comment