புர்கா அணியும் பெண்கள் அபராதத்தை செலுத்த 10 லட்சம் யூரோ நிதியுதவி அளித்த தொழிலதிபர்


பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா ஆடையை அணிவதால் பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படுகின்றன எனக் கருதிய பிரான்ஸ் அரசு முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதித்துள்ளது.
இதற்கு பாரம்பரிய உடை அணியும் முஸ்லிம் பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் அரசு உத்தரவை மீறி பொது இடங்களில் புர்கா அணிந்து அபராதமும் கட்டி வருகின்றனர்.
பிரான்சில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து அபராதம் செலுத்துவது தொடர்வதால் முஸ்லிம் தொழிலதிபர் ராசிட் நெகாஸ் ஒரு நிதி அமைப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த அமைப்பில் 10 லட்சம் யூரோக்கள் உள்ளன.
இந்த நிதி தொகுப்பு மூலம் புர்கா அணிந்து அபாரதம் அணியும் பெண்கள் அபராதம் கட்டலாம். இந்த தொழிலதிபரின் அறிவிப்பு பிரான்ஸ் அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம் சமூகத்தினர் அவரது மத நம்பிக்கையை மிகவும் வரவேற்றுள்ளனர்.
பாரிசை மையமாக கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளரான ராசிட் பிரான்சில் மட்டும் அல்லாது உலகம் முழுவதம் புர்காவிற்கு தடை உள்ள இடங்களில் பெண்களுக்கு விதிக்கும் அபராதத்தை செலுத்தி வருகிறார்.
இவர் புதன்கிழமை புர்கா தடை உள்ள பெல்ஜியத்திற்கு சென்று முஸ்லிம் பெண்கள் புர்கா ஆடைக்கான அபராதத்தை செலுத்தி வந்தார்.


Newindianews

No comments:

Post a Comment