அதிக தண்ணீர் ஆபத்து! உடலியல் நிபுணர் எச்சரிக்கை

இலண்டன்: நம் உடலுக்கு தேவைப்படும் தண்ணீரை விட அதிக அளவில் தண்ணீர் குடித்தால் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று உடலியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
முன்பெல்லாம் அதிக அளவில் தண்ணீர் குடித்தால் நல்லது சிறுநீரகம் பாதிப்பு ஏற்படாது, உடல் எடை குறையும், நினைவுதிறன் அதிகரிக்கும் என்றெல்லாம் மருத்துவ ஆய்வுகள் தெரிவித்தன. ஆனால் இப்போது அதிகளவு தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆபத்து என்று இங்கிலாந்தை சேர்ந்த உடலியல் நிபுணர் ஜி.பி. மர்க்கரட் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியபோது அவரவர் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அந்தஅளவுக்கு மட்டுமே குடிக்க வேண்டும். பொதுவாக அனைவருக்கும் ஒரு நாளைக்கு 1 முதல் 2 லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படும். அந்த அளவுக்கு மட்டும் குடித்தால் போதுமானது. உடலுக்கு தண்ணீர் தேவைப்படும் போது தாகம் எடுக்கும் அதற்கு தகுந்தார்போல் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தேவைக்கு மேல் தண்ணீரை திணிக்கக்கூடாது. அப்படி செய்தால் உடல் உறுப்புகள் கூடுதல் பணிகளை செய்ய வேண்டி இருக்கும் இதனால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும். உடலில் கலோரியை எரிக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் தண்ணீர் தேவைப்படும். அதன் தேவைக்கு ஏற்றார்போல் உடலில் தண்ணீர் இருக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையும் போது தலைவலி ஏற்படும். எனவே தலைவலி இருந்தால் தண்ணீர் குடிக்க வேண்டும். பாட்டிலில் அடைந்து வைக்கப்படும் தண்ணீர் ஆரோக்கியமானது அல்ல என்றும் அவர் கூறினார்.

Inneram

No comments:

Post a Comment