எஸ்.எம்.எஸ்.சில் பதிவுசெய்தால் மட்டுமே வினியோகம்: காஸ் ஏஜன்சிகள் மீது மக்கள் புகார்

தென்காசி : "எஸ்.எம்.எஸ்.மூலமே காஸ் பதிவு செய்வோம்' என சில காஸ் ஏஜன்சி நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.காஸ் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் காஸ் சிலிண்டர் காலியானவுடன் 60 நாட்களுக்குபின் நேரடியாகவோ, போன் மூலமாகவோ அல்லது செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ்.செய்தாலோ பதிவு செய்து கொள்ளலாம் என சம்பந்தப்பட்ட வினியோகஸ்தர்கள் அறிவித்திருந்தனர். அது நடைமுறையில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது சில ஏஜன்சிகளில் சிலிண்டர் காலியானவுடன் சம்பந்தப்பட்ட வினியோகஸ்தர்களுக்கு போன் செய்தால் போனை எடுக்க மறுக்கின்றனர்.

நேரில் சென்று பதிவு செய்ய சென்றாலும், "நீங்கள் உள்ளது செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ். செய்தால் மட்டுமே நாங்கள் பதிவு செய்ய முடியும்' என சம்பந்தப்பட்ட காஸ் வினியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்கள் கூறுகின்றனர்.செல்போன் இல்லாதவர்கள் எப்படி எஸ்.எம்.எஸ். செய்ய முடியும் அல்லது செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ்.அனுப்ப தெரியாதவர்கள் என்ன செய்வார்கள். இதுபற்றி உணவு வழங்கல் பிரிவு, வருவாய் பிரிவு அலுவலர்களிடம் கேட்டால் எங்களுக்கு இதுவரை அரசு உத்தரவு ஒன்றும் வரவில்லை என்கின்றனர். மேலும் இரண்டாவது காஸ் சிலிண்டருக்கு பதிவு செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கழித்து அனுமதி வந்தாலும் தற்போது இரண்டாவது சிலிண்டர் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஏஜன்சிகள் கூறுகின்றன. இதனால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே பொதுமக்களை குழப்பும் காஸ் வினியோகஸ்தர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் என நுகர்வோர்கள் விரும்புகின்றனர்

No comments:

Post a Comment