"ஆன்லைன்' மூலம் புகார் தரலாம்மாநகர போலீஸ் அறிவிப்பு

திருநெல்வேலி:"பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம்' என மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.தமிழக போலீஸ் துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. போலீஸ் துறை அலுவலகங்கள் படிப்படியாக கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு உள்ளது. கம்ப்யூட்டர் மூலம் முக்கிய தகவல் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ஸ்டேஷன் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது."ஆன்லைன்' மூலம் போலீசில் புகார் அளிக்கும் வசதி உள்ளது. போலீஸ் துறையில் பொதுமக்கள் புகார்கள், தகவல்களை அளிக்கலாம்.புகார்தாரர்கள் அளிக்கும் புகார், தகவல் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். நெல்லை மக்கள் அளிக்கும் புகார் மாநகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பப்படும். புகார் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை புகார்தாரருக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.இந்த இணையதளம் மூலம் போலீஸ் துறை சம்பந்தமான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் என மாநகர போலீசார் தெரிவித்தனர்.

Dinamalar

No comments:

Post a Comment