பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் அதிகரிப்பு: அதிர்ச்சியில் மக்கள்

சமீபத்தில் மத்திய அரசு டீசல், சமையல் கியாஸ் மற்றும் மண்ணெண்ணைய் விலையே உயர்த்தியது. இதனால் நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால் டீசல், சமையல் கியாஸ், மண்ணெண்ணைய் விலை உயர்வை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் பெட்ரோல் பம்ப் விநியோகஸ்தர்களுக்கான கொமிஷன் தொகையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
கொமிஷன் உயர்வை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ 0.27 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ 0.15 பைசாவும் விலை உயர்வு இருக்கும். 

NewIndia

No comments:

Post a Comment