சில தமிழக மாவட்டங்களில் இலேசான நில நடுக்கம்!

நேற்று செவ்வாய்கிழமை காலையில் சேலம், கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை காலை 5:22 மணியளவில், சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி,எதப்பூர் மற்றும் ஆத்தூரிலும், நாமக்கல் மாவட்டத்திலுள்ள வடுகம்பட்டி, ப்துப்பட்டி ஆகிய கிராமங்களிலும் 2.9 ரிச்டர் அளவுகோளில் நில அதிர்வு ஏற்பட்டதாக சேலம் புவியியல் கண்காணிப்பு மையத்தில் பதிவாகி உள்ளது.
இரண்டாவது முறை காலை 8.22 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் 3.2 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்த கிராம மக்கள் கூறுகையில், பெரும் சப்தத்தை கேட்டதாகவும், சில பாத்திரங்களும் மற்றும் சில பொருட்களும் கீழே விழுந்து  உருண்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் நில அதிர்வை உணர்ந்ததாகவும் கூறியுள்ளனர்.
சேலம் மாவட்ட கலெக்டர் கே.மகரபூஷணம், புவியியல் கண்காணிபு மையத்திற்குச் சென்று பதிவுகளை ஆய்வு செய்துள்ளார்.

Inneram

No comments:

Post a Comment