பின்லேடன் மரணத்தை பாராட்டிய ஜேர்மனி அதிபர் மீது நீதிபதி கிரிமினல் புகார் பதிவு

அல்கொய்தா தீவிரவாதத் தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2ஆம் திகதி பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் அமெரிக்கப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் கொல்லப்பட்டதும் ஜேர்மனி அதிபர் ஏங்கலா மார்கெல் மகிழ்ச்சி தெரிவித்தார். அவரது நிலைக்கு ஜேர்மனி அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அதிபரின் கருத்து குறித்து ஜேர்மனி நீதிபதி கிரிமினல் புகார் பதிவு செய்துள்ளார். ஜேர்மனியில் தனது மகிழ்ச்சி நிலைக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் ஏங்கலா மார்கெல் தனது கருத்தில் மாற்றம் செய்துள்ளார்.
சர்வதேச தீவிரவாத வலைப்பின்னலை மேற்கொண்ட பின்லேடன் மரணம் தமக்கு நிம்மதியைத் தந்துள்ளது. பின்லேடன் மரணம் எனக்கு மகிழ்ச்சி என்பதை விட நிம்மதி பெரு மூச்சு கிடைத்துள்ளது என அவர் பாசர் நேபிரஸ்சே நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பேட்டி மே 7ஆம் திகதி நாளிதழில் வெளியாகியுள்ளது. பின்லேடன் கடந்த 2001ஆம் ஆண்டு வாஷிங்டன் மற்றும் நியூயார்க் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தியவர் ஆவார். அவர் கடந்த திங்கட்கிழமை கொல்லப்பட்டார்.
அவரது மரணச் செய்தி கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஏங்கலா மார்கெல் அறிக்கை வெளியிட்டார். அவரது நிலையை ஜேர்மனி மக்கள் பலரும் ஏற்கவில்லை. குறிப்பாக மார்கெலின் சொந்த பழமைவாத கட்சியான கிறிஸ்டியன் டெமாக்ரேட்ஸ் கட்சியனரும் ஏற்கவில்லை.
இந்த நிலையில் ஹம்பர்க் நீதிபதி ஹெய்ன்ஸ் உத்மான் அதிபர் மார்கெலுக்கு எதிராக கிரிமினல் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். பின்லேடன் மரணத்தால் ஆப்கானிஸ்தான் நிலையில் மாற்றம் வந்து விடாது. அங்கு தொடர்ந்து ஜேர்மானிய வீரர்கள் தொடர்ந்து இருப்பார்கள் என்றும் மார்கெல் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து ஸ்திரமற்ற நிலைக் காணப்படுகிறது. எனவே அந்த நாட்டை பாதுகாக்க வேண்டிய நிலையில் நமது வீரர்கள் உள்ளனர். அந்த பகுதி மீண்டும் தீவிரவாத மையமாக உருவெடுப்பதை தடுக்க வேண்டும் என்றும் மார்கெல் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து ஜேர்மானிய துருப்புகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என 60 சதவீத மக்கள் கருத்து தெரித்துள்ளனர்.

NewIndiaNews

No comments:

Post a Comment