இந்தியர் இருவருக்கு மரண தண்டனை: மலேசியா நீதிமன்றம் தீர்ப்பு

மலேசியாவில் போதை பொருள் கடத்துவது மிகப்பெரும் குற்றமாகும். அந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அங்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
அது போன்று போதை பொருள் கடத்திய 2 இந்தியர்களுக்கு மலேசியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
அவர்களில் ஒருவரது பெயர் சமாத் மொகமது சுல்தான் (44). இவர் போதை மருந்து விற்பனையாளர் ஆவார். இவர் நகை பெட்டியில் மறைத்து வைத்து கோலாலம்பூருக்கு போதை பொருளை கடத்தி வந்தார். விமான நிலையத்தில் வைத்து அவரை பொலிசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 3.9 கிலோ எடையுள்ள "கேட்டமின்" என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் கடந்த 2009-ம் ஆண்டு பெப்பிரவரி 25-ந்திகதி நடந்தது. கைது செய்யப்பட்ட சமாத் மீது கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சி.டி. மரியா அகமது குற்றம் சாட்டப்பட்ட சமாத்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதே போன்று, மற்றொரு இந்தியரும் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினார். அவருக்கும் இதே போன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் அவர் பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை. இவர்கள் 2 பேரிடம் இருந்தும் 12 கிலோ எடையுள்ள கேட்டமின் போதைப் பொருள் பறிமுதல்
செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

newindianews

No comments:

Post a Comment