இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது.
இதனால் பீதியடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்தனர். சில ஹோட்டல்களின் யன்னல் கண்ணாடிகள் உடைந்தன. சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் காயம் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடித் தகவல் ஏதும் இல்லை.
சுலாவேசி தீவில் உள்ள கேந்தரி நகருக்கு தென்கிழக்கே 9 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து 3 முறை கடுமையான நில அதிர்வுகளும் ஏற்பட்டன.
நிலநடுக்கத்தால் பெண்களும், குழந்தைகளும் பீதி அடைந்து தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வயல்வெளிப் பகுதிகளுக்குச் சென்றதாக கேந்தரி நகரின் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்களும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.

Newsonews

No comments:

Post a Comment