ரியாதில் துப்பாக்கி சூடு! ஒருவர் பலி இருவர் படுகாயம்

ரியாத்: சவூதி தலைநகர் ரியாத்தில் உள்ள இண்டஸ்ட்ரியல் ஏரியாவில் உள்ள மசூதி ஒன்றின் அருகிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமையன்று துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத் துப்பாக்கி சூட்டில் இறந்தவர் அரபு நாட்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளார் இவர் குண்டடி பட்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தீவிர சிகிக்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கியால் சுட்டவர் ஆசிய நாட்டை சேர்ந்தவராவார் எதற்காக துப்பாக்கி சூடு நடந்தது என்பதற்கான காரணம் காவல்துறையினரால் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
மேலும் சம்பவம் நடந்த மறுநாளே ரியாத் காவல்துறையினர் இத்தகவலை பத்திரிக்கைகளுக்கு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்த மேலும் இருவர் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்துள்ளனர் இவர்களில் ஒருவர் ஆசிய நாட்டை சேர்ந்தவர் என்றும் மற்றவர் அரபு நாட்ட்டை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
துப்பாகியால் சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்ற கொலையாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் அவனிடமிருந்து துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆயினும் கொலைக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை

No comments:

Post a Comment