நாளொன்றுக்கு 7,200 சிசுக்கள் இறந்து பிறக்கின்றன- உலகச் சுகாதார மையம்

நாளொன்றுக்கு 7,200க்கும் அதிகமான குழந்தைகள் உலகம் முழுதும் இறந்து பிறப்பதாக உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இதில் 98% இறப்புகள் ஏழை நாடுகளிலும், மத்தியதர நாடுகளிலும் நிகழ்ந்தாலும், பணக்கார நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்று லான்செட் தெரிவித்துள்ளது.

இதற்குப் பெரும்பாலும் காரணமாக லான்செட் ஆய்வு தெரிவிக்கையில், பல நாடுகளில் குழந்தைப் பிறப்பிற்கான சுகாதார மையங்களின் அவல நிலையே என்று தெரிவித்துள்ளது.

2009ஆம் ஆண்டின் கணக்கின்படி சுமார் 26 லட்சம் குழந்தைகள் ஆண்டொன்றுக்கு இறந்தே பிறக்கின்றன.

ஆனாலும் 1995ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி ஆண்டொன்றுக்கு உலகம் முழுதும் 30 லட்சம் சிசுக்கள் இறந்து பிறப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இது 2009ஆம் ஆண்டு குறைந்திருந்தாலும், குறைவு விகிதம் மிகக் குறைவாக உள்ளது என்று லான்செட் ஆய்வு தெரிவிக்கிறது.

குழந்தைகள் இறந்து பிறப்பதற்கு 5 பிரதான காரணங்களை உலகச் சுகாதார மையம் பட்டியலிட்டுள்ளது:

1.குழைந்தை பிறப்பில் ஏற்படும் சிக்கல்கள்.
2. கருவைச் சுமக்கும்போது தாய்மார்களுக்கு ஏற்படும் நோய்க்கிருமிகள்.
3. தாய்மைக் குறைபாடுகள் குறிப்பாக அதிக ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்.
4. கரு வளர்ச்சியில் தடைகள்.
5. கரு உருவாகி வளரும்போதே உடல் உறுப்புகள் குறைபாட்டுடன் வளர்வது.

குறிப்பாக 26 லட்சம் சிசுக்கள் இறப்பில் சுமார் 12 லட்சம் குழந்தைகள் குழந்தைப் பேற்றின் போதே இறக்கின்றன.

இரண்டில் மூன்று பங்கு சாவு கிராமப்புறப் பகுதிகளில் ஏற்படுகிறது. இந்தியாவில் பல்வேறு மானிலங்களில் பல்வேறு நிலைமைகள் இருப்பதால் 1000 பிறப்புகளில் 20 முதல் 66 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. பாகிஸ்தானில் 1000 சிசுக்கள் பிறப்பில் 47 இறந்து பிறக்கின்றன. வங்கதேசத்தில் 36. 

குழ்ந்தைகள் இறந்து பிறக்கும் விகிதத்தில் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா, வங்கதேசம், காங்கோ, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், தான்சானியா ஆகிய நாடுகள் மட்டும் 66% பங்களிப்பு செய்கின்றன.

இவையெல்லாம் பதிவு செய்யப்பட்ட சிசு இறப்புகள். பதிவு செய்யப்படாதவை பற்றிய விவரங்கள் இல்லை என்று கூறுகிறது லான்ச

web dunia

No comments:

Post a Comment