ஏமனுக்கு செல்லாதீர்.....! அமெரிக்கா கண்டிப்பு

சனா : ஏமன் நாட்டில் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ளதால், அமெரிக்கர்கள், அந்நாட்டுக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. துனிசியா, எகிப்து, லிபியாவை தொடர்ந்து, அண்டை நாடுகளிலும் அதிபர்களுக்கு எதிரான போராட்டங்கள் பரவி வருகின்றன. ஏமனில், 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
இப்போராட்டத்தை ஒடுக்க, அங்கு அரசு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் தற்போது சூழ்நிலை சரியில்லாததால், அமெரிக்கர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம். ஏமனில் தங்கியுள்ள அமெரிக்கர்களும் கூடிய விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என, அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஏமனில் ஊழலும், வேலை வாய்ப்பின்மையும் பெருகி விட்டதை எதிர்த்து போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். இதனால், சனா நகரில் பாதுகாப்புப் படையினர் மீது போராட்டக்காரர்கள் கல்லெறிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஏமன் நாட்டில், அல்-குவைதா அமைப்பு சுதந்திரமாக செயல்படுவதால், அந்நாட்டில் வாழும் அமெரிக்கர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக் கூடும் என்பதால், அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.

dinamalar

No comments:

Post a Comment