தேர்வுகளை முன்கூட்டியே நடத்த ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை  தேர்தல் 13ம் தேதி நடக்கிறது. இந்நிலையில்,  பிளஸ் 2 தேர்வுகள் இன்று தொடங்கி, 25ம் தேதி வரை நடக்கிறது. மெட்ரிக்குலேஷன் தேர்வுகள்  இந்த மாதம் 22ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வுகள்  28ம் தேதியும் தொடங்கி ஏப்ரல் 11 வரை நடக்கின்றன. இந்த கல்வி ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி முடிகிறது. அதுவரை பள்ளியை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடப்பதால், அதற்குள் மற்ற வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வை முடிக்க வேண்டிய கட்டாயமும் பள்ளிகளுக்கு வந்து விட்டது. எனவே தேர்வுகளை இன்னும் முன்கூட்டியே நடத்தலாமா என்பது குறித்து பள்ளி கல்வி துறையும், தொடக்க கல்வி துறையும் இன்று முடிவு செய்யும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment