ஊழல் - காங்கிரஸ் தலைவருக்கு ஓர் ஆண்டு கடுங்காவல் தண்டனை

கேரளாவின் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணனுக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வருடம் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. இடமலையாறு அணைக்கட்டு நீர்
 மின்சாரத்திட்ட ஊழல் வழக்கில் காங்கிரசைச் சார்ந்த பாலகிருஷ்ணனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
1982 ஆம் ஆண்டு  பாலகிருஷ்ணன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனக்கு தெரிந்தவர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியதில் மின்சார வாரியத்திற்கு ஏறத்தாழ ரூ 2 கோடி இழப்பு ஏற்பட்டது.  இந்த வழக்கில் ஏற்கனவே கேரள உயர்நீதிமன்றம் இவரை நிரபராதி என குறிப்பிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அந்த சமயத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவரும் தற்போதைய முதல்வருமான அச்சுதானந்தன் வழக்கு தொடர்ந்தார். மறு விசாரணையில் இந்தத் தீர்ப்பை மாற்றி எழுதியுள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம் மற்றும் சவுகான் ஆகியோர்.
மேலும் சாட்சியங்கள் இருந்தும் இந்த வழக்கு பல ஆண்டுகள் நடைபெற்றதற்கும் உச்சநீதிமன்றம் கண்டனம் வெளியிட்டுள்ளது. அரசியல்வாதிகள் மீதான ஊழல் வழக்குகள் மட்டும் நீண்ட காலம் நடைபெறுவது குறித்தும் நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
inneram.com

No comments:

Post a Comment