கருப்புப் பண முதலைகள் பட்டியலில் கொச்சி ஐபிஎல் அணி உரிமையாளர், தலைவரும் அடக்கம்

லீச்டென்ஸ்டெய்ன்: ஜெர்மனியின் லீச்டென்ஸ்டெய்ன் வங்கியில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள 18 இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கி இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. இந்தப் பட்டியலில் கொச்சி ஐபிஎல் அணியின் உரிமையாளர், தலைவர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளதால் கொச்சி அணிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த அணி ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த 18 பேரின் பெயர்களையும், மத்திய அரசு வெளியிடாத நிலையில், தெஹல்கா பத்திரிகை அதிரடியாக வெளியிட்டு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பு பணத்தை வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே கேட்டுக்கொண்ட பிறகும் கூட, அந்தப் பட்டியலை வெளியிட முடியாது என்றும் பட்டியலை வெளியிடுவதில் சட்ட சிக்கல், அயலுறவுப் பிரச்சினை உள்ளதாகவும் பிரணாப் முகர்ஜி கூறிவந்தார். இந்த விஷயத்தில் யாரையும் அம்பலப்படுத்தி விடக் கூடாது என்று மத்திய அரசு கவனமாக இருப்பதாகவே தெரிகிறது. காரணம், உச்சநீதிமன்றம் பல முறை சொல்லியும் கூட படு பிடிவாதமாக இருந்து வருகிறது மத்திய அரசு.

இந்நிலையில் ஜெர்மன் நாட்டில் உள்ள எல்.ஜி.டி. வங்கியில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் 18 பேரின் பெயர்கள் அடங்கிய ரகசிய பட்டியலை ஜெர்மன் அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்டது.

இந்த விவரம் சீலிடப்பட்ட கவரில் வைத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்தப் பட்டியலை எப்படியோ பெற்றுவிட்ட தெஹல்கா, 18 பேரில் 15 பேரின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

அந்த 15 'கருப்பு' இந்தியர் விவரம்:

1.மனோஜ் துபுலியா 2.ருபால் துபுலியா, 3.மோகன் துபுலியா, 4.ஹஸ்முக்காந்தி, 5.சிந்தன்காந்தி, 6.திலீப் மேத்தா, 7.அருண் மேத்தா, 8.அருண் கோசார், 9.குன்வாந்தி மேத்தா, 10.ரஜினிகாந்த் மேத்தா, 11.பிரபோத் மேத்தா, 12.அசோக் ஜெபுரியா, 13.ராஜ் பவுண்டேசன், 14.ஊர்வசி பவுண்டேசன், 15.அம்புருனோவா அறக்கட்டளை

இந்தப் பட்டியலில் இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவன அதிபர் ஒருவரும் உள்ளதாகவும், அனைத்தையும் உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே அவர் பெயரை வெளியிட உள்ளதாகவும் தெஹல்கா கூறியுள்ளது. விரைவில் முமுப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தப் பட்டியல் இந்திய அரசுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2011-ம் ஆண்டே கிடைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கொச்சி அணியின் உரிமையாளரும்!

இந்த நிலையில் இப்பட்டியலில் ஐபிஎல் கொச்சி அணியின் உரிமையாளர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளதால் ஐபிஎல் அணிகள் மீதான சந்தேகப் பார்வை வலுத்துள்ளது.

இவர்களில் திலீப் மேத்தா, அருண் மேத்தா, குன்வாந்தி மேத்தா, ரஜினிகாந்த் மேத்தா, பிரபோத் மேத்தா ஆகியோர் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் பட்டியலில் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஐபிஎல் அணிகள் மீதான சந்தேகப் பார்வை மேலும் வலுவடைந்துள்ளது. மேலும், ஐபிஎல் கொச்சி அணி ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் தற்போது கருப்புப் பண சர்ச்சையில் சிக்கியிருப்பதால் அந்த அணி போட்டித் தொடரிலிருந்து நீக்கப்படும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.

யார் இந்த மேத்தாக்கள்?:

ஐபிஎல் கொச்சி அணியின் உரிமையாளர்களாக ஆங்கர் எர்த், பரினி டெவலப்பர்ஸ், ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் லிமிட்டெட், பிலிம் வேவ்ஸ் கம்பைன், ஆனந்த் ஷியாம் எஸ்டேட்ஸ் மற்றும் விவேக் வேணுகோபால் ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் பிலிம் வேவ்ஸ் கம்பைன் நிறுவனத்தின் நிறுவனர் ஹர்ஷத் மேத்தா. இவரது சகோதரர்கள்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மேத்தாக்கள் ஆவர். பிலிம் வேவ்ஸ் கம்பைன் என்பது ஒரு முதலீட்டு நிறுவனமாகும். ரோசி ப்ளூ குரூப்பின் மூத்த பங்குதாரராகவும் ஹர்ஷத் மேத்தா உள்ளார். இதன் வருடாந்திர டர்ன் ஓவர் ரூ. 7500 கோடியாகும். உலக அளவில் நகைத் தொழிலில் முன்னணியில் இருக்கும் நிறுவனமும் கூட.

thanks to: thatstamil

No comments:

Post a Comment