சுமார் 3000 கோடி ரூபாய் நஷ்டத்தைக் கணக்கில் கொண்டு வராமல் பொய் கணக்கு காண்பித்துள்ளதாக, மத்திய அரசின் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார். சென்ற 2009-10 நிதி ஆண்டில் ஏர் இந்தியாவின் நஷ்டமாக சுமார் 5551 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தணிக்கை அதிகாரியின் தணிக்கை படி, ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டம் சுமார் 8589 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஏர் இந்தியாவின் செய்தி தொடர்பாளர், "DTA எனப்படும் பிற்போட்ட வரி சொத்து மதிப்பீட்டில் ஏற்பட்ட குழப்பமே நஷ்டம் குறைவாக காண்பித்ததற்குக் காரணமென்றும், ஏர் இந்தியா நிறுவனம், DTA குறித்து மற்ற விமான நிறுவனங்கள் பின்பற்றுவதையே பின்பற்றியதாக வும்" குறிப்பிட்டார். "இது குறித்து தணிக்கை அதிகாரிக்கு விளக்கம் அளிப்போம்" என்றும் கூறியுள்ளார்.
inneram.com
No comments:
Post a Comment