
உலகத்தை அச்சுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் நோய் ஒருவரிடமிருந்து எளிதாக மற்றவருக்கு பரவக் கூடியதாகும். இந்நோயால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நோய் குறித்து லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் ஒரே பாலினத்தவர்களிடம் பன்றிக் காய்ச்சல் நோய் வேகமாக பரவும் என்று தெரியவந்துள்ளது.
இது குறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது: பன்றிக் காய்ச்சல் நோய் பெரியவர்களை விட, குழந்தைகளிடம் மிக வேகமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும். அதை விட மூன்று மடங்கு வேகமாக ஒரு சிறுமியிடமிருந்து மற்றொரு சிறுமிக்கும், ஒரு சிறுவனிடமிருந்து மற்றொரு சிறுவனுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவும்.
அதாவது எதிர் பாலினத்தவரை விட, ஒரே பாலினத்தவரிடம் இந்நோய் மிக வேகமாக பரவுவது எங்களது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆய்வாளர்கள் கூறினர்.
worldnews
No comments:
Post a Comment