தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுனாமி வருவதை முன் கூட்டியே அறியும் கருவி

நாகர்கோவில்: ஹைதராபத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் வி்ஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப ஆய்வு கழகம் வின்ஸ் கல்லூரியுடன் இணைந்து நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படுவதை கண்டறியும் செஸ்மிக் கருவியை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொறுத்தியுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழவிற்குப் பின்னர் பூகம்பம் மற்றும் நிலநடுக்கம் பற்றி முன்னதாக அறிந்து தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசின் தொழில்நுட்ப துறை மற்றும் கடல்சார் ஆய்வு மையங்கள் பல்வேறு ஆய்வுகள் நடத்தி வருகின்றன. 2005-ம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் புவியியல் துறை அதிகாரிகள் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதன்படி கன்னியாகுமரி, கருங்கல், பேச்சிப்பாறை, திருவனந்தபுரம் ஒருஅடுக்காகவும், அச்சன்கோவில்-செங்கோட்டை-திருநெல்வேலி, களக்காடு-மணப்பாடு, கொடைக்கானல்-பழனி, சேலம்-நாமக்கல்-வேலூர், பாண்டிசேரி-சென்னை ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படலாம் என தெரிய வந்தது. இதனையடுத்து தென்காசி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, வேலூர், செங்கல்பட்டு, சென்னை மற்றும் பாண்டிசேரி ஆகிய இடங்களில் நில நடுக்கம் குறித்த அதிர்வலைகளை பதிவு செய்யும் கருவிகள் உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன் பொருத்தப்பட்டுள்ளது.

முதன் முறையாக மத்திய விஞ்ஞான தொழில்நுட்ப கழகம் வின்ஸ் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து செஸ்மிக் என்ற கருவியை பொருத்தியுள்ளது. கடந்த வாரம் இதனை தொழில்நுட்ப ஆய்வு மைய ஆராய்ச்சியாளர் ரிஷிகேஷ் மீனா மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் பொருத்தினர். இதன் மூலம் 4000 கிமீ தூரத்திற்கு நிலத்தில் ஏற்படும் அதிர்வுகள் பதிவாகும். பதிவான மறுகணமே செயற்கைகோள் வழியாக ஹைதராபத்தில் உள்ள தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பும். அதன் மூலம் பாதிப்படையும் சாத்திய கூறுகள் உள்ள அனைத்து இடங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரானில் நில அதிர்ச்சி ஏற்பட்டால் கூட அது இந்த கருவியில் பதிவாகும். இதே போல் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டாலும் 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே இதன் மூலம் தகவல் பெறலாம்.

thatstamil

No comments:

Post a Comment