ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசா திடீர் கைது

இன்று 4-வது முறையாக ஆ.ராசாவிடம் மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். காலையில் தொடங்கிய விசாரணை தொடர்ந்து மதியம் வரை நீடித்தது. பிற்பகல் 2.45 மணி அளவில் ஆ.ராசாவை சி.பி.ஐ. போலீசார் திடீரென்று கைது செய்தனர்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை கூறி இருந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. டெலிபோன் துறை முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மற்றும் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் இன்று 4-வது முறையாக ஆ.ராசாவிடம் மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். காலையில் தொடங்கிய விசாரணை தொடர்ந்து மதியம் வரை நீடித்தது. பிற்பகல் 2.45 மணி அளவில் ஆ.ராசாவை சி.பி.ஐ. போலீசார் திடீரென்று கைது செய்தனர். 

ராசாவின் முன்னாள் செயலாளர் ஆர்.கே.சந்தோ லியா, தொலை தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆ.ராசா கைது குறித்து பா.ஜனதா கூறியதாவது:- 

முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆர்.ராசா கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் காலதாமதமானது.1.76 லட்சம்கோடி ரூபாயையும் ராசாவே அடித்திருப்பார் என்று கூறமுடியாது. உழலுக்கு பின் பலர் இருக்கிறார்கள் அவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும். 

ராசா கைது என்பது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தின் தொடக்கம் தான். இதற்காக யாரும் அரசுக்கு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டாம். ஊழல் குறித்து இன்னும் பல கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டியுள்ளது. 

இவ்வாறு பா.ஜனதா தலைவர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார். 

ஆர். ராசா கைது குறித்து காங்கிரஸ் கூறியதாவது:- 

இது போன்ற ஊழல் வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டம் தன் கடமையை செய்யும். இதனால் தி.மு.க. உடனான உறவில் எந்த பாதிப்பும் இருக்காது. 

இவ்வாறு காங்கிரஸ் பொது செயளர் ஜனார்தன் திவேதி கூறினார்.

நன்றி:நியூஸ் ஒன்

No comments:

Post a Comment