விமானத்தில் பெண் பயணியுடன் சில்மிஷம் செய்த நியூஸிலாந்து வீரர்

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பே முன்னணி வீரர் ஒருவர் மீது சர்ச்சை கிளம்பிவிட்டது. அவரது பெயர் டிம் சவூதி. நியூஸிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக நியூஸிலாந்து அணி விமானத்தில் சிட்னியில் இருந்து டுபாய் வழியாக மும்பைக்குப் புறப்பட்டது.
டுபாய்க்குச் சென்று கொண்டிருந்தபோது அதேவிமானத்தில் பயணித்த பெண் பயணியிடம் டிம் சவூதி சில்மிஷம் செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. அவர் அந்தப் பெண் பயணியை தான் பயணித்த உயர்வகுப்பு இருக்கைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இருவரும் மதுகுடித்து விட்டு சில்மிஷங்களில் ஈடுபட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. சவூதி மற்றும் அந்தப் பெண் பயணியின் நடத்தை மிகவும் அநாகரிகமாக இருந்தது என்று அதே விமானத்தில் வந்த பயணி ஒருவர் தெரிவித்ததாக நியூஸிலாந்து ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அதிர்ச்சியடைந்த நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தியது. டிம்சவூதி மற்றும் சக வீரர்களிடம் விசாரணை மேற்கொண்டது. இதன் பின்னர் நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "டிம் சவூதி அந்தப் பெண் பயணியுடன் இருந்தது உண்மை தான். ஆனால், அவர்களுக்குள் எந்தவித தகாத செயல்களும் நடக்கவில்லை என்று நம்புவதாக அணியின் மேலாளர் கூறியுள்ளார். நடந்தது என்ன என்பது பற்றி சவூதி எழுத்து பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். இதேபோல் சக வீரர்களிடம் விசாரித்தபோது அவர்களும் அப்படி ஏதும் நடக்கவில்லை. இந்தத் தகவல் ஆச்சரியம் அளிக்கிறது என்று தெரிவித்தனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

thinakural

No comments:

Post a Comment