ஆபாச வழக்கில் சிக்கிய பாப் பாடகர் நஜ்ரிலுக்கு சிறை தண்டனை

இந்தோனேசியாவின் பிரபல பாப் பாடகரான நஜ்ரில் இர்ஹாமுக்கு(29), ஆபாச வீடியோ வழக்கில் மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் நஜ்ரில் ஏரில் இர்ஹாம். இவர் இரண்டு பிரபல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்த மூன்று வீடியோக்கள், கடந்தாண்டு ஜூன் மாதம் இணையதளங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை கிளப்பின.
இவ்வழக்கை விசாரித்த பாண்டுங் நகர கோர்ட், இர்ஹாமுக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தீர்ப்பு கூறிய நீதிபதி சிங்கி புடி பிரகாசோ "ஒரு பிரபலமானவர், தன்னைப் பார்த்து ரசிகர்களும் நடப்பர் என்பதை எப்போதும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்" என்று அறிவுரை கூறியுள்ளார்.
இவ்வழக்கில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய இருப்பதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில், ஆபாசப் படங்களுக்குத் தடை விதிப்பது குறித்து இப்போது தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நன்றி:நியூஸ் ஒன்

No comments:

Post a Comment