சந்தேக மரணத்தால் கல்லூரி மாணவர் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மாணவர் ஆரிப்ராஜா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடலை வாங்க அவனது பெற்றோர் சாகுல் அமீது மல்லிகா பேகம், மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர். திடீர் என ஆரிப்ராஜா தற்கொலை செய்யவில்லை. கொலை செய்து அவனை கிணற்றில் வீசியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட 4 பேரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் எனக் கூறினர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூரில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு திருப்பூர் பி.என்.ரோடு அண்ணா நகர் பள்ளுபட்டி பகுதியை சேர்ந்த டெய்லர் சாகுல் அமீதின் மகன், ஆரிப்ராஜா(வயது18) என்பவர் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி கல்லூரி அருகே உள்ள ஒரு கிணற்றில் ஆரிப்ராஜா அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆரிப்ராஜா அதிக பாடங்களில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மாணவர் ஆரிப்ராஜா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடலை வாங்க அவனது பெற்றோர் சாகுல் அமீது மல்லிகா பேகம், மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர். திடீர் என ஆரிப்ராஜா தற்கொலை செய்யவில்லை.

கொலை செய்து அவனை கிணற்றில் வீசியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட 4 பேரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் எனக் கூறினர். பெற்றோருக்கு ஆதரவாக திருச்சி மாவட்ட த.மு.மு.க. தலைவர் அப்துல் ஹக்கீம் செயலாளர் பயஸ் முகமது , துணை செயலாளர் பாபு, பொருளாளர் ரபீக், இளைஞரணி செயலாளர் உதுமான் அலி, மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் முஸ்லிம் அமைப்புகள், உறவினர்கள் திரண்டு விட்டனர். போஸ்மார்ட்டம் அறை முன்பு தரையில் கோஷம் போட்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. அவர்களுடன் தில்லை நகர் இன்ஸ்பெக்டர் கென்னடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பெற்றோர் தரப்பில் கூறியதாவது:-

ஆரிப்ராஜாவுக்கு அங்கு உள்ள சிலர் செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் அதில் ஏற்பட்ட பிரச்சினையில் அவரை அடித்து கொன்றியிருப்பதாவும் கூறினர். பிணத்தை கயிற்றால் கட்டி வீசி உள்ளதாகவும் கூறினர். உடலில் காயங்கள் உள்ளது. தொண்டையில் குத்தி உள்ளனர். என கூறினர். ஆரிப்ராஜா, திருப்பூர் சொந்த ஊருக்கு சென்று விட்டு 1-ந்தேதிதான் மீண்டும் கல்லூரிக்கு வந்து உள்ளான். 3-ந்தேதி காணாமல் போய் உள்ளான். 4-ந்தேதி அவன் பிணமாக மீட்கப்பட்டதை தாமதமாக கூறியதும் சந்தேகத்தை எழுப்புவதாக கூறினர்.

எனவே 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை பிணத்தை வாங்க மாட்டோம் என கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் சமரசப்பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

thanks to:newindianews.com

No comments:

Post a Comment