புளியங்குடி மலையடிவார பகுதியில் கஞ்சா தோட்டம் வன துறையினர் தீவிர தேடுதல் வேட்டை

புளியங்குடி : புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் கஞ்சா பயிரிடப்படுள்ளதாக வந்த தகவலையடுத்து வன துறையினர் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதாக மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து புளியங்குடி பகுதியில் கோட்டமலை பீட் பகுதி வழியாக வனக்காப்பாளர்கள் தங்கராஜ், முருகையா, காந்திமதிநாதன் மலைவாழ் இன மக்கள் உதவியுடன் அப்பகுதியிலிருந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் தனிப்பிரிவு போலீசார் சிலரும் அப்பகுதி வழியாக சென்று மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அடர்ந்த காட்டு பகுதியை கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் மாலை இவர்கள் மீண்டும் திரும்பிவிட்டனர். மேலும் இந்த தேடுதல் வேட்டை சிறப்பு அதிரடிபடை போலீசாருடன் மலைவாழ் இன மக்கள் உதவியுடன் நடைபெறும். மேலும் கடையநல்லூர் வனச்சரகத்திற்குட்பட்ட வைரவன்குளம் பீட் பகுதியில் புளியங்குடி வனச்சரகர் மயில் தலைமையில் வனவர் முருகையா, வனக்காப்பாளர் முருகையா, இசக்கிமுத்துபாண்டியன், குருசாமி, முரளி உள்ளிட்ட வனத்துறையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

dhinamalar

No comments:

Post a Comment