![]() |
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நேற்று காலையில் இந்தோ-திபெத் போலீஸ் படைக்கு ஆள் எடுத்தார்கள். இதில் பல மாநிலங்களில் இருந்தும் 1 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஹவுரா சென்ற ம்கிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ரெயிலில் இடம் இல்லாததால் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் ரெயில் கூரை மீதும் பயணம் செய்தனர். ஷாஜகான்பூர் மாவட்டம் ரோஜா ரெயில் நிலையம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்த போது, ரெயில் பாதைக்கு மேலே சென்று கொண்டிருந்த சக்தி வாய்ந்த மின் வயரில் இருந்து மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட 10 இளைஞர்கள் அந்த இடத்திலேயே கருகி செத்தனர். பலர் அருகில் இருந்த மேம்பாலம் இடித்தும், மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியாலும் ரெயிலை விட்டு கீழே குதித்தனர். இதிலும் பலர் பலியானதாக தெரிகிறது. 15 பேருக்கும் மேல் பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏராளமானவர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்த துயர சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் ரெயிலின் சில பெட்டிகளுக்கு தீ வைத்து எரித்தனர். நன்றி:நியூஸ் ஒன் |
ரயில் கூரையில் பயணித்த பத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment