பஹ்ரைனில் நாடாளுமன்றம் முற்றுகை

பஹ்ரைனில் அரசு நிர்வாகத்துக்கு எதிராகப் போராடி வரும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டின் நாடாளுமன்றத்தை இன்று முற்றுகையிட்டனர்.
சன்னி முஸ்லீம்களையும், சன்னி அரசகுடும்பத்தாரையும் எதிர்த்து போராடும் ஷியா முஸ்லீம்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யும் படி கேட்டுக் கொண்டனர். மத்திய மனாவில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் முன்பு கூடியுள்ள 500 பேர் கொண்ட போராட்டக் குழுவினரில் ஒருவரான மிர்சா அல் சிகாபி நாங்கள் இந்தப் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வந்தது எங்களை பிரதிநிதித்துவபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளத் தான்.
இராணுவத்தினர் சுட்டுக் கொன்றவர்களின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார். வெளிநாடுகளைச் சேர்ந்த சன்னி முஸ்லீம்களுக்கு இராணுவம், காவல் துறையில் பணியிடங்கள் தரப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பலவித சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஷியா முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்புகள் தராததையும், மருத்துவ உதவிகளும் மற்ற சலுகைகளும் தங்களுக்கு மறுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏமன், பாகிஸ்தான் மற்றும் ஜோர்டன் நாட்டினர் காவல்துறையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால் எங்கள் குழந்தைகளுக்கோ வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எதுவும் செய்யாத பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உம் ஜாசர் என்பவர் கூறினார்.
பஹ்ரைன் ஆட்சியாளர்களும் அமைதியாக போராட்டங்கள் நடத்தவும், பேச்சு வார்த்தைக்கு இசைவு தெரிவித்தும் உள்ளனர். சென்ற ஆண்டு கைது செய்யப்பட்ட 300 பேரை விடுதலை செய்தும் 4 புதிய அமைச்சர்களை நியமித்தும் மன்னர் உத்தரவிட்டிருந்தார்.
பேர்ல் ஸ்கோயர் மனாமா நீதிமன்ற வளாகப்பகுதிகளில் அரசு எதிர்ப்பாளர்கள் போராட்டம் தொடர்கிறது. அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஆதரவு தரப்பினரும் தெருக்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.
thanks to: Newsone

No comments:

Post a Comment