ஆருஷி வழக்கு: பெற்றோர்கள் மீது குற்றச்சாட்டு

புதுதில்லி, பிப்.9 (டிஎன்எஸ்) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலத்தில் ஆருஷி என்ற 14 வயது மாணவி கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு முதலில் மாநில சி.ஐ.டி. விசாரித்து பின்னர் சி.பி.ஐ. விசாரித்தது. குற்றவாளி யார் என்பது பற்றி எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில், சி.பி.ஐ. தனது விசாரணையை முடித்துக்கொண்டது.

இந்நிலையில் ஆருஷி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கும் படி மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி உத்தரவிட்டார். இதனால் சி.பி.ஐ. இந்த கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்கியது.

விசாரணையில் ஆருஷியின் பெற்றோர்களுக்கு கொலையில் முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ், நுபூர் தல்வார் இருவரும் முக்கிய குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இருவரையும் வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட வேண்டும் என நீதிபதி பிரிதி சிங் உத்தரவிட்டுள்ளார். சி.பி.ஐ. குற்றச்சாட்டை எதிர்த்து ராஜேஷ் கொடுத்த மனுவை நீதிபதி பிரிதி சிங் நிராகரித்தார்.

இந்திய பீனல் கோடு, பிரிவு 302 (கொலை), 201 (சாட்சியங்களை சிதைத்தல்), 34 (சுய காரியத்திற்காக சிலருக்கு எதிராக முனைவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. (டிஎன்எஸ்)


thanks to: chennai online

No comments:

Post a Comment