இணையதளம் மூலம் அடையாள அட்டை: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு

கொழும்பு:
 பிப்.8- தமிழ் ஈழ மக்கள் தங்களின் அடையாள அட்டையை இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அறிவித்துள்ளது.

www.tgte-us.org என்ற இணையதளம் மூலம் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம் என்றும், அதற்கான கட்டணமாக 15 டாலர்கள் செலுத்த வேண்டும் என்றும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

விவரங்களை பதிவு செய்தவர்களுக்கு சில வாரங்களில் அவர்களது முகவரிக்கு அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்வதற்கான இணையத் தொடர்பு: http://www.tgteelection2010.com/idcard/Register.html


dhinamani

No comments:

Post a Comment