மும்பை - ஆசியாவின் நான்காவது அதிக வாடகை வசூலிக்கும் நகரம்

இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை, ஆசியா பசிபிக் வட்டாரத்தில் 4-வது ஆக அதிக வாடகை வசூலிக்கும் நகர் என்ற பெயரை பெற்றுள்ளது. பிரபல சொத்து நிறுவனமான லாசல்லே நடத்திய ஆய்வில், ஹாங்காங், டோக்யோ, சிங்கப்பூர் ஆகிய நகரங்கள், முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளன.
இந்திய தலைநகர், புது டில்லி 10 வது இடத்தையும், பெங்களூரு 24 வது இடத்தையும், சென்னை 26 இடத்தையும் பெற்றுள்ளது. இந்தியாவின் தொடர்ந்த பொருளாதார வளர்ச்சி காரணமாக சர்வதேச நிறுவனங்கள், இந்திய நகரங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதால், வாடகை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. 4 வது இடத்தை பெற்ற மும்பை, ஆசியாவின்  ஷங்காய், சியோல், சிட்னி ஆகிய புகழ்பெற்ற நகரங்களை பின் தள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நேரம்

No comments:

Post a Comment