காதலன் ரசிப்பதற்காக காமிரா : மாணவி சஸ்பெண்ட்

கொல்லம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவியர் விடுதி கழிப்பறையில் காதலன் ரசிப்பதற்காக கேமரா செல்போன் வைத்த மாணவி கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கொல்லத்தில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி வளாகத்தில் மாணவியர் விடுதியும் உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் அங்குள்ள கழிப்பறையில் கேமரா செல்போன் இருப்பதை மாணவி ஒருவர் பார்த்தார். உடனே விடுதி வார்டனிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் உடனே கொல்லம் கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கேமரா செல்போன் வைத்தது அதே விடுதியில் தங்கியுள்ள ஒரு மாணவி எனத் தெரியவந்தது. விசாரணையில் தனது காதலன் பார்த்து ரசிப்பதற்காக அவ்வாறு செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் மாணவியின் காதலனை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த சைபர் செல் உதவியை நாடியுள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவியை சஸ்பெண்ட் செய்துள்ளது.

thanks to:Nakeeran

No comments:

Post a Comment