![]() |
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலரை எட்டியுள்ளது என்றார். கச்சா எண்ணெய் இந்த அளவுக்கு படிப்படியாக உயர்ந்து வந்தும், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணய் ஆகியவற்றின் விலை இறக்குமதி விலையை விடக் குறைவாக விற்கப்பட்டு வருகிறது என்றும், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்று வருகின்றன என்றும் ஜெய்பால் ரெட்டி கூறினார். பெட்ரோல் விலையும் லிட்டருக்கு 1 ரூபாயில் இருந்து 2 ரூபாய் வரை நஷ்டத்தில்தான் விற்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர்,ஆனாலும், பெட்ரோல் விலையை இப்போதைக்கு உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்றார். NewsIndia |
பெட்ரோல் விலையை இப்போதைக்கு உயராது: ஜெய்பால் ரெட்டி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment