சோலார் செல்ஃபோன் - சென்னையில் அறிமுகம்

சூரிய ஒளியில்  சக்தி பெற்று  இயங்கும் செல்பேசியை "வோடாஃபோன்' என்ற  நிறுவனம் நேற்று சென்னையில்  அறிமுகப்படுத்தியது.
 தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி இதை அறிமுகம் செய்து வைத்தார். இதன் விலை ரூ.1,580/= என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
"வெளியில் செல்லும்போது கைகளில் செல்போனை வைத்திருந்தாலே பின்புறம் உள்ள மின்கலன் (Battery) போன்ற அமைப்பு சூரிய சக்தியை த் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும். இதற்கென செல்போனைத் தனியாக வெயிலில் வைக்க வேண்டாம். ஒரு மணி நேரம் வரை சக்தி ஏற்றி  25 முதல் 30 நிமிடங்கள் வரை பேசலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment